தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட புலிகளின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கும் யோசனைக்கு அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (13.06.18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சர் டி.எம். சுவாமிநாதனால் போரில் உயிரிழந்த புலிகளின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்குதல் தொடர்பான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டது.
எனினும் குறித்த யோசனைக்கு அமைச்சரவையில் ஏனைய அமைச்சர்கள் பலர் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதோடு, பல படுகொலைகளை மேற்கொண்ட புலிகளின் குடும்பத்தினருக்கு நட்ட ஈடு வழங்கவேண்டுமா என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சரவையின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.