பங்களாதேசைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஷாஜகான் பாச்சு என்பவர் இனந்தெரியாதாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 60 வயதாக இந்த எழுத்ததாளர் பதிப்பகம் ஒன்றை நடத்தி வருவதுடன் மதசார்பற்ற கொள்கைகள் பற்றி துணிச்சலுடன் தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் தனது பூர்வீக கிராமமான ககால்டியில் தனது நண்பர்களை சந்திப்பதற்காக சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. மதசார்பற்ற கொள்கைக்கு அவர் ஆதரவாக பேசி வந்ததால் பல முறை அவருக்கு மத அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து கொலை மிரட்டல்கள் வந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.