குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சன்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு சேவையின் பிரதானி சிசிர மெண்டிஸிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.
லசந்த கொலை நடந்த நேரம் மற்றும் கீத் நொயார் கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் சிசிர மெண்டிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிக் காவற்துறை மா அதிபராக கடiமாற்றினார். காவல் திணைக்களத்தில் இருந்து ஓய்வுபெற்ற சிசிர மெண்டிஸ் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தேசிய புலனாய்வு சேவையின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்னதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் காலை 10 மணிக்கு முன்னிலையான சிசிர மெண்டிஸிடம் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
லசந்த கொலை மற்றும் கீத் நொயார் கடத்தல் ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இதன் போது முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.
புலனாய்வுப் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி குறித்து விசாரணை நடத்தப்படாது – அரசாங்கம்