இலங்கையின் கடல்வள முகாமைத்துவம் மற்றும் மீன்வளம் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்கு நோர்வேயின் ஆய்வுக் கப்பலொன்று இலங்கை வரவுள்ளதாக மீன்பிடி, நீரியல் வளங்கள் அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்வளம் தொடர்பாக விரிவான ஆய்வொன்றினை மேற்கொள்வதற்காக நோர்வேயின் சிறப்பு ஆய்வாளர் பிரிட்ஜொப் நன்சன் தலைமையில் இந்தக் கப்பல் எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பை வந்தடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலின் வருகையானது மீன்பிடித்துறை சார்ந்த அபிவிருத்திக்கு வழிவகுப்பதுடன் கடல்சார் நீலப்பொருளாதார இயலுமை மற்றும் எதிர்கால செயற்பாடுகள் என்பவற்றுக்கு அடிப்படையாக அமையும் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.