இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான சவுமியா வெற்றி பெற்றுள்ளதையடுத்து சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் 79தாக அதிகரித்துள்ளது. கடந்த கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல்ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 11ஆம் திகதி நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்யிடுள்ளனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குள் எண்ணும் பணி பெங்களூர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 14 சுற்றுகளாக வாக்குள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டி முன்னணியில் இருந்தார்.
9 சுற்றுகள் வரை எண்ணப்பட்டபோது 15,000 வாக்குகள் வரை வித்தியாசம் இருந்தது. ஆனால் அடுத்த 5 சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது. பின்னர் ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.