குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
கோழி இறைச்சி, டின் மீன், முட்டை மற்றும் கருவாடு என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படும் என மீன்பிடித்துறை நீரியல் வள அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். விரைவில் இந்த தடையுத்தரவு அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீன்பிடித்துறை அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் யோசனைத் திட்டமொன்று முன் வைக்கப்படும்எ ன அவர் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.