Home இலங்கைவிபுலானந்தா இசை நடனக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு…

விபுலானந்தா இசை நடனக் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.

மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட நாவற்குடா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று (13) மாலை தூக்கில் தொங்கிய நிலையில் விபுலானந்தா இசை நடன கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாவற்குடா கிழக்கு, 4 ஆம் குறுக்கு வீதி, விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த இந்த மாணவி ,வெல்லாவெளி காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட காக்காச்சிவட்டை, மண்டூர் பாடசாலை வீதியை சேர்ந்த 22 வயதுடைய சங்கரத்துரை பானுஜா என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இவர் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடன கல்லூரியில், கட்புலன் திறன் நுட்ப துறையில் இரண்டாம் வருட மாணவியாக கல்வி பயில்வதாகவும் , இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத் தடவியல் காவற்துறைக் குழுவினர் மேற்கொண்டு வருவதாகவும், காத்தான்குடி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More