விசாரணை அதிகாரிகளிடம் தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்த 80 வயதான அப்துல் கயூம். தன்னுடைய சகோதரரான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது கைத்தொலைபேசியை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக் அவருக்கு இவ்வாறு 19 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் கைது செய்யப்பட்ட தலைமை நீதிபதி அப்துல்லா சயீதுக்கும் அதே குற்றத்துக்காக 19 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது