கிளிநொச்சி மாவட்டத்தில் பளைப்பகுதியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2018 மே மாதம்; வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் நான்கு இலட்சத்து தொண்ணூற்றொராயிரத்து முந்நூற்று தொண்ணூற்றெட்டு சதுரமீற்றர் பரப்பளவில் (491,398sqm ) இருந்து ஜந்தாயிரத்து இருநூற்று பதினான்கு(5214) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.
இம்மாத இறுதிப்பகுதியில் இந் நிறுவனத்தின் நடவடிக்கைகள் மற்றும் கண்ணிவெடி அகற்றும் பகுதிகள் என்பவற்றை மேற்பார்;வை செய்வதற்காக இலங்கைக்கான ஜப்பான் தூதரகப் பிரதிநிதிகள் வருகை தர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.