காஷ்மீரில் பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு முக்கிய பங்கு இருப்பதாக இந்திய மத்திய அரசு குற்றம் சுமத்தியுள்ளது உள்ளது. ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுஜாத் புகாரி நேற்று முன்தினம் இனந்தொயாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இதன்போது அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் இவ்வாறு பத்திரிகை ஆசிரியர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு முக்கிய பங்கு இருப்பதாக மத்திய அரசு குற்றம் சுமத்தியுள்ளது உள்ளது.ஐ.எஸ்.ஐ-ன் வழிக்காட்டுதலின் படி தான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர் என மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் டீநறையதினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது