கடந்த 6 வாரங்களில் அமெரிக்க எல்லையில் சுமார் 2,000 குழந்தைகள் அவர்களின் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்ஸிகோவில் இருந்து சட்டவிரோதமாக எல்லையை கடக்கின்ற வயதுக்குவந்தோர் கைது செய்யப்படுவர் என்னும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்படுபவர்களுடன் வந்த குழந்தைகள் அவர்களின் பராமரிப்பில் இருந்து அகற்றப்பட்டு ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்படுகின்றனர்.இந்த நடவடிக்கை மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவோர் குற்றவியல் நடைமுறையில் தண்டிக்கப்படுவதாக கருதப்படுகின்றது
பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட இந்த குழந்தைகளின் வயது பற்றிய தகவல்கள் வெளியடப்படவில்லை என்பதுடன் இந்த குழந்தைகள் அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவை துறையின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை குழந்தைகளை இவ்வாறு பிரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது