135
மக்களின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொண்ட தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் யார் என்பது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கண்டி, கெட்டம்பேவில் அமைந்துள்ள ராஜோபவனாராம விகாரைக்கு, சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ஸ விகாராதிபதி கெப்பெட்டியாகொட சிறிவிமல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Spread the love