தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்படுமென அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளள்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைதம் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடைபெற்று உள்ளன எனவும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 99 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
43 நாட்கள் முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்து அதனை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டனு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது எனவும் இவ்வாறு கையகப்படுத்திய நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.