ஆப்கானிஸ்தான் அரசு படைகள் மற்றும் தலிபான் அமைப்பினர் இடையே ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது ரழழான் கொண்டாட்டங்கள் முடிவடைந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அடுத்த 10 நாட்களுக்கு யுத்த நிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ள ஆப்கானிஸ்தான அரசு , தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தது.
யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தபோது தலிபான் அமைப்பினர் ; அங்குள்ள பாதுகாப்புப்படையினரை தழுவியதுடன், பொதுமக்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டனர். எனினும் நாங்கர்ஹர் பகுதியில் தலிபான்களும், அரசாங்க அதிகாரிகளும் கூடிய கூட்டத்தில் ஐஎஸ் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 36 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளமையானர் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதா என கேள்வியை எழுப்பியுள்ளது.
அNதுநேரம் சனிக்கிழமையன்று அப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கனி, தலிபான்கள் முன்வைத்த அனைத்து பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து சமாதான பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடுவதற்குத் தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது