இலங்கை மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனிலையில் நிறைவு பெற்றுள்ளது. கடந்த 14-ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 253 ஓட்டங்கைளப் பெற்றிருந்தது.
இதையடுத்து துடுப்பெடுதாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 300 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 47 ஓட்டங்கள் முன்னிலையில் காணப்பட்ட நிலையில் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி 342 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இறுதிநாளான நேற்று மேற்கிந்திய தீவுகள் அணி சிறிது நேரம் மழையும் குறுக்கிட்டதன் காரணமாக 5 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் விளையாட்டு முடித்துக் கொள்ளப்பட்டதனால் போட்டி சமனிலையில் முடிவுற்றது.
இ இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்கள் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஷனான் கப்ரியல் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.