ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடைமுறைகளுக்கு இலங்கை வழங்கும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நடைபெற்ற ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத் தொடரில் தனது இறுதி உரையினை ஆற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை அதிகாரிகளை கடந்த 5 ஆண்டுகளில், 5 தடவைகள் இலங்கைக்கு செல்ல அரசாங்கம் அனுமதி அளித்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறன ஒரு அணுகு முறையால் சிறந்த முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தால் எதிர்வரும் வாரங்களில், புதிய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.