Home உலகம்சுவீடன் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி நால்வர் காயம்…

சுவீடன் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி நால்வர் காயம்…

by admin

சுவீடனின் மல்மோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 18 மற்றும் 29 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளார்கள் என சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மல்மோநகரில் உள்ள கடை ஒன்றுக்கு முன் நின்றிருந்தவர்கள் மீது காரிலிருந்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 15 முதல் 20 வரையிலான துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்றதை தன்னால் கேட்க முடிந்ததாக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த விபரங்கள் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள காவல்துறையினர் இதனை பயங்கரவாத தாக்குதல் என கருதவேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர். இரு குழுக்கள் இடையிலான மோதல் காரணமாகவே இந்த வன்முறை இடம்பெற்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More