இலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் கௌரிஸிக்குமு் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினனர் சந்திரகுமாருக்குமிடையே சந்திப்பொன்று இன்று(19) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் உள்ள விருந்தினர் விடுத்தி ஒன்றில் பகல் பதினொரு மணி முதல் ஒரு மணி வரை இடம்பெற்ற இச் சந்திப்பில், கிளிநொச்சி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இரு தரப்பினர்களும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக வேலைவாய்ப்பின்மை, வறுமை, அபிவிருத்தி அவசியம், மக்களின் நாளாந்த வாழ்க்கை நெருக்கடிகள் என்பன குறித்து பேசப்பட்டதோடு, கண்ணி வெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு பிரித்தானிய அரசு வழங்கி வரும் ஒத்துழைப்புக்கும் சந்திரகுமாரினால் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, முழுமையாக கண்ணிவெடி அகற்றும் வரைக்கும் பிரித்தானியாவின் பங்களிப்பு அவசியம் என்பதனையும் அவர் வலியுறுத்தினார். மேலும் சமகால அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவரது குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.