உலகம் பிரதான செய்திகள்

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து – 180 பேரைக் காணவில்லை


இந்தோனேசியாவின் தோபா ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமர் 180 பேரைக் காணவில்லை என அந்நாட்டின் மீட்பு குழு தெரிவித்துள்ளது.  கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தோபா ஏரியில் பயணிகளுடன் சுமத்ரா படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 130 பேர் காணாமல் போயிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள விசாரணையில் தற்பொழுது இந்த விபத்தில் காணாமல் போனவர்கள் 180 என தெரிவிக்கப்பட்டு;ளளது.இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 180 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த விபத்தில் இதுவரை 18 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனதுடன் மேலும் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனுமதிக்கப்பட்ட அளவை விட 3 மடங்கு அதிக அளவிலான பயணிகளையும் ;பொருட்களையும் ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என N தெரிவிக்கப்படுகின்றது

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link