சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரஸ்யாவில் நடைபெற்று வருகின்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் போர்த்துக்கல் அணித் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பெயினுடனான முதல் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்திருந்தார்.
இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அடித்தவர்கள் பட்டியலில் 84 கோல்களுடன் ஹங்கேரி வீரர் பெரென்ஸ் புஸ்காஸ் உடன் 2-வது இடத்தை பகிர்ந்திருந்தார்.
இந்தநிலையில் இன்றைய மொராக்கோவிற்கு எதிரான போட்டியில் அடித்த கோல் மூலம் ரொனால்டோவின் கோல் 85 ஆக உயர்ந்ததுடன் 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஈரானின் அலி டயெய் 109 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது