சிறைத் தண்டனை பெற்றுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நாளை வெள்ளிக்கிழமைக்குள் பிணை வழங்கப்படவிலையெனின் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக பொதுபல சேன அமைப்பு தெரிவித்துள்ளது. ஞானசார தேரர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிணை மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக குறித்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் பொதுபல சேன அமைப்பினர் கோட்டை ஆலமரத்தடியில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விதாரன்தெனியே நந்த தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு பிணை வழங்காவிடின் சாகும் வரையான உண்ணாவிரம்…
142
Spread the love