20
அமைச்சின் செயலாளருடன் நேற்றையதினம் நடைபெற்ற பேச்சுவார்ததைகள் தோல்வி அடைந்த காரணத்தால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் என தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்றைய கலந்துரையாடலில் எவ்விதமான தீர்வுகளும் கிடைக்காத வகையில் நிறைவடைந்ததாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் எச்.கே. காரியவசம் தெரிவித்துள்ளார். மேலும், தமது வேலை நிறுத்த போராட்டம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love