இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை விதித்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதாக தினேஷ் சந்திமால் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
மேலும் இதற்காக சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தினேஷ் சந்திமால் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ளதுடன் போட்டிக்கான பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தினேஷ் சந்திமால் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தனக்கு விதித்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.