பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றினால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன ஊடகவிலயாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி, சந்தியா எக்நெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண’டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கலபொட அத்தே ஞானசாரர் சிறையில் இருந்து வெளியேறுவாரா?
Jun 22, 2018 @ 04:24
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலபொட அத்தே ஞானசார தேரரால், தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று(22-06-2018) இரண்டாவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது. கடந்த 19ம் திகதி இந்த மேன்முறையீட்டு மனு முதல்முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலையாகாமையினால் விசாரணை இன்று வரையில் பிற்போடப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்காக, ஞானசார தேரருக்கு 6 மாதங்களில் நிறைவு செய்யும் வகையில் ஒரு வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறித்து பௌத்த கடும்போக்காளர்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வெளிவந்துள்ள நிலையில் இன்று இவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது