131
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அர்ஜூன் அலோசியஸூக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தின் விற்பனை முகவர் பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மதுவரி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அலோசியஸூக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தின் முகவர் பதவிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகவே விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக மதுவரி திணைக்களம் கூறியுள்ளது.
Spread the love