165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இராணுவ ஆட்சி சம்பந்தமான கருத்தை முழுமையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாட்டில் அப்படியான நிலைமை ஏற்பட்டால், உயிரை பணயம் வைத்து போராடவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் 69 வது பிறந்த தின நிகழ்வில் கருத்து வெளியிட்ட அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அனுநாயக்கர் வெடருவே உபாலி தேரர், நாட்டை அபிவிருத்தி செய்ய இராணுவ ஆட்சியாளராவது பதவிக்கு வர வேண்டும் எனவும் அப்படியான ஆட்சியை ஏற்படுத்த கோத்தபாய ராஜபக்ச வர வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
Spread the love