180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்திற்குள் புகுந்து வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட பத்துபேரை தாக்கிய காயப்படுத்திய சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்து விசாரிக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. B/666/18 வழக்கின் மூலம் சிறுத்தையை கொன்றவர்களை சமூக வலைதளங்கள் ஊடகங்களில் வௌிவந்த புகைப்படங்கள், ஒளிப்படங்கள் என்பவற்றை ஆதரமாக கொண்டு கைது செய்து விசாரிக்கவும், மற்றும் இறந்த சிறுத்தையை அழிக்கவும் என மூன்று விடயங்களுக்கு நீதி மன்றின் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
இன்று பகல் குறித்த உத்தரவினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு பிறப்பித்துள்ளது. நேற்றய தினம் அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களிற்குள் நுளைந்த சிறுத்தை, வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய போது அங்கிருந்த இளைஞர்களால் தற்காப்புக்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சிறுத்தை உயிரிழந்தமை தொடரிப்ல ஊடகங்களில் பரவலாக செய்தி வெளியானது.
இதேவேளை குறித்த சிறுத்தையின் மரணத்தின் பின்னர் சிறுத்தையை கொலை செய்வதுபோல் சமூக வலைத்தளங்கள் மூலம் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் செல்பி என்பன வெளியிடப்பட்டு வைரலாக பரவியது. இந்நிலையில் குறித்த புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இன்று பகல் குறித் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கில் இறுவெட்டு (சிடி) மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு அனைவரையும் கைது செய்யுமாறும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற கிளிநொச்சி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
Spread the love