161
தங்கப்பாளங்களை கடத்த முயன்ற சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்ட 6 கிலோ நிறையுடைய 60 தங்கப்பாளங்களின் பெறுமதி 36 மில்லியன் ரூபாவென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபர் தங்கப் பாளங்களை விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்த சந்தேகத்தின் பேரிலேயே கைதுசெய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட அதிகாரியை தடுத்து வைத்து தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Spread the love