லண்டனில் நடைபெற்றுவரும் குயின்ஸ் கிளப் சம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் செர்பிய வீPரர் ஜோகோவிச் மற்றும் குரோசிய வீரர் சிலிச் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இந்தப் போட்டியின் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் ஜோகோவிச், பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்த்து போட்டியிட்ட நிலையில் 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
முன்னதாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டி ஒன்றில் மரின் சிலிச் வெற்றியீட்டியுள்ள நிலையில் இன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஜோகோவிச் சிலிச் ஆகியோர் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது