கிளிநொச்சி – அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இருவரை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட பத்துபேரை தாக்கிய காயப்படுத்திய சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்யுமாறு வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது
சிறுத்தையை கொன்றவர்களை சமூக வலைதளங்கள் ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்கள், ஒளிப்படங்கள் என்பவற்றை ஆதரமாக கொண்டு கைது செய்து விசாரிக்கவும், மற்றும் இறந்த சிறுத்தையை அழிக்கவும் என மூன்று விடயங்களுக்கு நீதி மன்றின் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்திருந்தது.
குறித் வழக்கு விசாரணையின் போது வழக்கில் இறுவெட்டு (சிடி) மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு அனைவரையும் கைது செய்யுமாறும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற கிளிநொச்சி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளமைக்கமைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது