சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு பல காலங்களாக நீடித்து வந்த தடை தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. அங்கு பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1990-ம் ஆண்டுகளில் இருந்தே பெண்கள் உரிமை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் மீறி கார் ஓட்டிய பெண்கள் கைது செய்யப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் , நீண்ட கால கோரிக்கையை ஏற்று பெண்கள் கார் ஓடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சவூதி அரேபிய அரசு அண்மையில் நீக்கியதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் கார் ஓட்ட அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.
அதற்கமைய சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இன்று முதல் பெண்கள் கார் ஓட்டுவதற்கு ஆரம்பித்துள்ளனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விசயமாக கருதப்படுகிறது. இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அங்கு பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகளை விலக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.