அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் பணியாற்றுவதற்காக, வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்காவின் வேர்ஜீனியா மாகாணத்தில் உள்ள தி ரெட் ஹென் லெக்ஸ் எனும் உணவகத்தின் இணை உரிமையாளர் ஒருவர், சாரா சாண்டர்ஸையும் அவரது குடும்பத்தினரையும் இவ்வாறு உணவகத்தை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மனிதாபிமானமற்ற மற்றும் நியாயமற்ற நிர்வாகத்தில் சாரா சாண்டர்ஸ் பணியாற்றுகிறார் என தான் நம்புவதனால்தான் அவரை உணவகத்திலிருந்து வெளியேற்றியதாக அந்த உணவகத்தின் இணை உரிமையாளரான ஸ்டீபன் வில்கின்சன் எனும் பெண் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது