தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரியவுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் (26) இடம்பெறவுள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தேர்தல் சட்ட மூலத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும். இறுதித் தீர்மானம் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குள் மேற்கொள்ளப்படும்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இந்தச் சந்திப்பில் பங்கேற்க உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை புதிய தேர்தல் முறையின் கீழ் நடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் அடுத்த மாதம் 6ம் திகதி பாராளுமன்றத்தில் விசேட விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.