“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான்” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (24.06.18) நடைபெற்ற தனது உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், “கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளதால் எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தன் அவர்களின் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது. என்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன்.” எனவும் வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவ்வாறு இன்றி பிரிந்து செயற்பட்டால் “நமது மக்களை மக்களை நாமே அழிப்பதாக அமையுk; என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இரா சம்பந்தன், விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார். எனினும், தீர்வுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் தற்போது பின்னிற்கின்றதென குற்றஞ்சாட்டிய அவர், விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், அவற்றில் எதுவும் செயற்படுத்தப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 comment
அனைவரையும் அரவணைத்து குழுப்பணி செய்யாமல் “கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும். பிரிந்து செயற்பட்டால் நமது மக்களை நாமே அழிப்பதாக அமையும்” என்று சொல்லி தமிழ் மக்களை வழமையாக ஏமாத்துவது போல் விக்னேஸ்வரனையும் சம்பந்தர் தன் சுய நலனுக்காக ஏமாற்றுகின்ற முயற்சிக்கின்றார்.
“விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், அவற்றில் எதுவும் செயற்படுத்தப்படவில்லை” என்று சொல்லி விடுதலைப் புலிகளாலும் தன்னாலும் அரசியலத் தீர்வை எடுக்க முடியவில்லை என்று சம்பந்தர் நியாயப்படுத்த முயற்சி செய்கிறார்.
“விடுதலைப் புலிகளின் (தமிழர்களின்) சுய ஆட்சியை அழிக்க சர்வதேசமும் தானும் (சம்பந்தனும்) உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியது”. தற்போது தீர்வுத் திட்டத்தை உருவாக்கி அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் பின்னிற்கின்றது” என்று செயலத் திறன் அற்ற சம்பந்தர் கூறுகின்றார்.
சம்பந்தரின் தலைமையின் கீழ் ரி.என்.ஏ யின் அனைத்து தமிழ் கட்சிகளின் ஒற்றுமை அழிக்கப்பட்டுள்ளது, வெளிப்படைத்தன்மை இல்லாமல் போயுள்ளது, தனிமனித ஆதிக்கம் கட்டுப்படுத்த முடியாது வந்துள்ளது, எல்லா வாய்ப்புகளும் தவறவிடப் பட்டுள்ளது மற்றும் சுமார் 180000 வாக்குகளை தமிழ் அரசுக் கட்சி இழந்துள்ளது. இதை உணர்ந்து சம்பந்தர் பெருந்தன்மையுடன் இராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது சம்பந்தர் நீக்கப்பட வேண்டும். இதை கட்சி உறுப்பினர்ககளும் பொதுத் தமிழ் மக்களும் சீக்கிரம் செய்ய வேண்டும்.