170
ரஸ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஜி’ பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து அணி அறிமுக அணியான பனாமை எதிர்கொண்டு 6-1 என வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் போட்டியிலும் 2-0 என வெற்றி பெற்றிருந்ததால், இரண்டு வெற்றியுடன் நொக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இரண்டாவது போட்டி ஜப்பான் மற்றும் செனகல் அணிகளுக்கிடையில் நடைபெற்ற நிலையில் இரு அணிகளும் 2-2 கோல் போட்டநிலையில் போட்டி சமனிலையில் முடிவடைந்தது.மூன்றாவது போட்டியில் கொலம்பியாவும் போலந்தும் விளையாடிய நிலையில் 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வென்றுள்ளது.
Spread the love