முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மூன்று மணி நேரம் வாக்குமூலம் வழங்கி விட்டு, காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளார். கோத்தபாய ராஜபக்ச இன்று முற்பகல் காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
தங்காலை வீரகெட்டிய பிரதேசத்தில் தனது தந்தை டி.ஏ. ராஜபக்ச நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்கவே கோத்தபாய நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதிராக பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவது மற்றும் கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி, கோத்தபாய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம் கோத்தபாய கைதுசெய்யப்படுவதை தடுத்து நிறுத்தி இடைக்கால உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.
கோத்தாபய ராஜபக்க்ஷ நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகினார்.
Jun 25, 2018 @ 05:02
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்;ஸ பாரிய நிதி மோசடி பிரிவில் முன்னிலையாகி உள்ளார்.. டி.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் காவற்துறை நிதி மோசடி பிரிவில் (FCID) முன்னிலையாகி உள்ளமை குறிப்பிடத்தக்க