குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 5வது நாள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில் இன்றுடன் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதங்களில் இடம் பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கே இன்னமும் ஒழுங்கான பதிலே நியமனங்களே வழங்கப்படாத நிலையில் அரசாங்கத்தினால் அடுத்த கட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தோர்வுக்கான வர்த்தாகமானி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலை தோடும் பட்டதாரிகளுக்கு நடைபெற்ற நேர்முக தேர்வானது உரிய முறையில் இடம் பெறவில்லை எனவும் தெரிவித்து பட்டதாரிகளுக்கான நியமனங்கள் புள்ளி அடிப்படையில் வழங்காது பட்டத்தின் அடிப்படையிலும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையிலும் நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த வாரம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த பாரளுமன்ற அமர்வில் வேலை தேடும் பட்டதாரிகள் விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்ததை தொடர்ந்து அவருடைய கோரிக்கையின் அடிப்படையிலும் அதே போன்று மன்னார் மாவட்ட சர்வ மத அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளினை ஏற்று குறிப்பிட்ட கவனயீர்ப்பு போரட்டத்தை இன்றுடன் கைவிடுவதாகவும் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டால் மீண்டும் எமது போராட்டத்தை தொடருவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.