கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு சமூகவலைத்தளங்களினூடாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருதாக தெரிவித்துள்ளார்.
பொதுபல சேன அமைப்பின், பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தன்னை அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இணங்கானப்பட்டு சிறைச்சாலை சென்றது முதல் தனக்கு பல்வேறு வழிகளில் உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கு எது வந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் பிள்ளைகள் இருவரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுல் வருவதுதான் மிகுந்த வேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.” என்றும் இது தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்தியாக எக்னெலிகொடவை, ஹோமாகம நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இணங்கானப்பட்ட ஞானசார தேரருக்கு ஆறு மாதங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பௌத்த பிக்குவான ஞானசார தேரருக்கு ஆதரவான பௌத்த கடும்போக்காளர்கள் சிலர், தங்களது முகநூலில் சந்தியா எக்னெலிகொடவுக்கு எதிரான பதிவுகளை பதிவேற்றி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.