முன்னாள் ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் ரொஹான் வெலிவிட்டவை சிங்கப்பூரின் குடிவரவு துறை அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னர் விடுதலைசெய்துள்ளனர். இன்று சிங்கப்பூர் சென்ற, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகசெயலாளர் வெலிவிட்டவை அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற ஊழல்மோசடிகள் தொடர்பாகவே இந்த விசாரைணைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இலங்கை அதிகாரிகளின் தலையீட்டை தொடர்ந்து அவரை சிங்கப்பூர் அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர். 2016இல் மாநாடொன்றிற்காக சிங்கப்பூர் சென்றவேளை அவரை அனுமதிக்க மறுத்த அந்நாட்டு அதிகாரிகள் இலங்கைக்கு திருப்பியனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தவின் ஊடக செயலர் ரொஹான் வெலிவிட்ட சிங்கப்பூரில் விசாரணைக்கு உள்ளானார்..
238
Spread the love

