இலங்கை பிரதான செய்திகள்

சுழிபுரம் காட்டுப்புல சிறுமியின் மரணம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு பின்னான கொலையா?


யாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுபுலம் பகுதியில் ஆறு வயது சிறுமியொருவர் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக வட்டுக்கோட்டை காவலடதுறையினர் தெரிவித்துள்ளனர். 6 வயதான சிவநேஸ்வரன் றெஜீனா சிறுமியே வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியில் கழுத்து நெரிக்கப்பட்டுக்காணப்பட்டதுடன் நெற்றி பகுதியிலும் காயங்கள் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதயை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என ஊர் மக்களால் அடையாளப்படுத்தப்பட்ட நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.