வெனிசுவேலாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை என தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், வெனிசுவேலாவின் துணை ஜனாதிபதி மற்றும் அதிகாரிகள் மீது தடை விதித்துள்ளது.
வெனிசுவேலாவின் துணை ஜனாதிபதி டெலிசி ரோட்ரிக்ஸ் மற்றும் அந்நாட்டின் 11 அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெனிசுவேலாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் நிக்கோலஸ் மடூரோ, மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தேடுக்கப்பட்ட நிலையில் இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது