ஆர்ஜன்ரீனாவில் நடைபெற்றுவரும் பொது வேலைநிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் முடங்கிப் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரான ப்யூனோஸ் ஏர்ரிஸில் புகையிரத மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை எனவும் இதனால், மில்லியன் கணக்கான மக்கள், வேலைக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச நாணய நிதியத்திடம் , 50 பில்லியன் டொலரகளை கடனாகப் பெறுவதற்கு ஜனாதிபதி மோரிசியோ மெக்ரி ஒப்புக்கொண்டமைக்கு எதிர்ப்பு தெரித்து தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. இக்கடனானது ஆர்ஜன்ரீனாவின் ஏழை மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது