சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்குடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை , ஜன பவுர எனும் திட்டத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழு ஒன்றை நியமித்து, அவர்களின் ஊடாக எல்லாப் பிரதேசங்களிலும் நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிந்து, அவற்றுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் முதல் கட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி குருணாகல் மாவட்டத்தில் நடைபெறவிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தால் அது ஜூலை மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.