ஆப்கானிஸ்தான் நிதிஅமைச்சர் எக்லில் ஹக்கிமி இன்று பதவி விலகியுள்ளார். அமெரிக்காவுக்கான ஆப்கானிஸ்தான் நாட்டு தலைமை தூதராக பதவிவகித்த எக்லில் ஹக்கிமி (Eklil Hakimi,) மேற்கத்திய நாடுகளின் நிதியுதவியை ஆப்கானிஸ்தானுக்கு பெற்றுக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியமையினால் அவரை பிரதமர் அஷ்ரப் கானி நிதியமைச்சராக நியமித்திருந்தார்.
அஷ்ரப் கானியின் வலதுகரமாக இருந்துவந்த எக்லில் ஹக்கிமி ஆப்கானிஸ்தான் அரசில் பொருளாதார ரீதியில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டை முன்னேற்றப்பாதைக்கு வழிநடத்தி சென்றார்.
இந்நிலையில், இன்று அவர் தனது பதிவிலகலை அறிவித்துள்ளார். நாளை புதன்கிழமை தான் நிதித்துறை அமைச்சுக்கு செல்லும் கடைசி நாளாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், தனது உடல்நிலை காரணமாக இந்த பதவிவிலகல் முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது