Home சினிமா ரஜினியை இயக்க காத்திருக்கும் இரண்டு இயக்குனர்கள் :

ரஜினியை இயக்க காத்திருக்கும் இரண்டு இயக்குனர்கள் :

by admin



இயக்குனர் பா. ரஞ்சித் இயக்க ரஜினி நடித்த காலா திரைப்படத்திற்குப் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் நிலையில் தமிழ் திரையுலகின் பிரபலமான இரண்டு இயக்குனர்கள் ரஜினியை இயக்குவதற்காக காத்திருக்கிறார்கள்.

காலா பட வெளியீட்டுக்கு முன்பே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்து இரண்டு திரைப்படங்களில் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர்கள் வெற்றிமாறன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவரிடமும் கதை கேட்டு காத்திருக்குமாறு சொல்லி உள்ளார் ரஜினி. வெற்றிமாறன் கூறிய கதை வடசென்னையை மையப்படுத்திய ஒரு கதை என்றும் கூறப்படுகிறது.

முருகதாஸ் கூறியது அரசியல் கதை. முதலில் முருகதாஸ் இயக்கத்திலும் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்திலும் ரஜினி நடிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் திரும்பும் ரஜினி சில நாட்களில் மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More