வியட்நாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்;பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதென வியட்னாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வியட்நாமிலுள்ள ஹா கைங் மாகாணத்தில் வீடு இடிந்ததில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் வெள்ளத்தில் 12 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவினால் பல கிராமங்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது