விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை “தந்திர நரி ” என்று குறிப்பிட்டமை முற்றிலும் உண்மையாகவே காணப்படுகின்றது . நாட்டு மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருவதாக குறிப்பிட்டு இனங்களுக்கிடையில் மறைமுகமாக வன்மையினை இவரே தோற்றுவிக்கின்றார் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை தந்திர நரி என்று குறிப்பிட்டமையின் அர்த்தம் தற்போது உண்மையாக்கப்பட்டுள்ளது. பிரபாகரனுக்கு புரிந்த விடயம் தற்போதே எமக்கு புரிந்துள்ளது. அரசியலில் இடம் பெறும் ஒவ்வொரு விடயங்களையும் பிரதமர் தமக்கு சாதகமான முறையில் மிக தந்திரமான முறையில் எவருக்கும் தெரியாத வகையில் பயன்படுத்திக் கொள்கின்றார் என இராஜகிரியவில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் ,
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, எந்தஅவாரு அரசியல்வாதியையும் நம்பமாட்டேன். 1959ஆம் ஆண்டு புத்தசாசன ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மதம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாக, தலதா மாளிகை மீது சத்தியம் செய்பவர்களுக்கே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஆதரவளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தலைவர் தெரிவு செய்யும் போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் முக்கியமாக காணப்படுகின்றது. ஆனால் இரண்டு பிரிவினரின் கோரிக்கைகளையும் கடந்த அரசாங்கமும் சரி தேசிய அரசாங்கமும் நிறைவேற்றவில்லை. ஆகவே தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்களது வாககுகளை கடந்த அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டாம் தேசிய அரசாங்கத்திற்கும் வழங்க வேண்டாம் . மக்களுக்காக செயற்படும் இரண்டு தரப்பிணருக்கும் தொடர்பற்ற தலைவரை தெரிவு செய்ய வேண்டும். சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கடந்த காலங்களில் அரசியல் ரீதியில் விட்ட தவறுகளை இன்முறையும் தொடர வேண்டாம். என தெரிவித்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில், அரசியல் கைக்கூலிகளாக இருப்பவர்களுக்குத் தீர்ப்பை மாற்றமுடியுமெனத் தெரிவித்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த அரசாங்கத்திலும், இந்த ஆட்சியிலும் நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டேன் எனத் தெரிவித்துள்ளார். அந்தப் பாடங்களின் அடிப்படையில், எந்தவோர் அரசியல்வாதியையும் நம்பமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தன்னைச் சிறைக்கு அனுப்பி, ஜம்பர் அணிவித்துப் பார்ப்பதற்கான முயற்சியானது தற்போது மாத்திரமல்ல , 2010ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளிலும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் தான் சிறைக்குள் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்த ஞானசார தேரர், சிறையிலிருந்த ஐந்து நாட்களும் தான் ஜம்பர் அணியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வெள்ளைக்காரர்கள் கொண்டுவந்த சட்டத்தின் கீழேயே கைதிகளுக்கு ஜம்பர் அணிவிக்கப்படுகின்றது என்றபோதிலும் தான் அந்த ஜம்பரை அணியவில்லை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, காவியுடையைக் கழற்றிவிட்டு, சிறைக்கூண்டுக்குள்ளே, சாரத்துடனும், தோளில் துண்டுடனும் இருந்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இரத்தினபுரியில், இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் என்னைச் சிறைக்கு அனுப்புவதில் இரு அமைச்சர்களும், அவருக்கு மேலாக இருக்கும் ஒருவரும் முயற்சி செய்வதாகவும் குறைந்தது 6 மாதங்களுக்காவது எனக்கு ஜம்பர் அணிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் தெரிவித்திருந்தேன்.
அதேபோன்று சிறைக்குள் அனுப்புவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரும் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும் எனினும், நம்பிக்கையுடன் நீதிமன்ற வளாகம் வரை சென்றேன் எனவும் அவர் தெரிவித்தார் மேலும் தன்னை சிறையிலடைத்த பொறுப்பை, இந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் சுயாதீனமாக செயற்படுவதற்கு நீதிமன்றங்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ள அவர் முக்கிமாக அரச சார்பற்ற நிறுவனங்களான தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கும், சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தூதுவராலயங்களுடன் இணைந்தே, இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேசத்துக்குத் துணை போகும் அரச சார்பற்ற அமைப்புகளின் கையாட்களாக, சட்டமா அதிபர் திணைக்களத்துக்குள் செயற்படும், அடியாட்களின் அபிப்பிராயங்களுக்கு அமையவே, அநீதியான தீர்ப்புகள் வழங்கப்படுவதாக தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னைச் சிறையிலடைக்க உதவிய பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு அண்மையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தின் மூலம் நீதிமன்றின் செயற்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதாள குழுக்களைப் பாதுகாத்து, திருடர்களைப் பாதுகாக்கும் இரண்டு முக்கிய அமைச்சர்களும், இவர்களுக்குத் தலைவராக இருப்பவரும், சட்டமா திணைக்களத்தின் அதிகாரிகளும் இணைந்து நீதிமன்றத்துக்கு சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு, நீதிமன்றம் சுயாதீனமாகச் செயற்பட இடமளிக்காமல், நீதிமன்றம் ஊடாக அழுத்தங்களைப் பிரயோகித்தே இவ்வாறான துரோகத்தைக் காவி உடைக்குச் செய்துள்ளனரென தாபன் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளர்h. நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை மாற்றும் பலம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களுக்கே இருக்கிறது. எமது பிரச்சினைகளைத் தெரிவிக்க சீனிகம தேவாலயமும், காளி கோவிலுமே உள்ளது. அங்கு சென்று சிதறுதேங்காய் அடித்துதான், எமது பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்த அவர் தான் இனியொரு போதும் எந்தவோர் அரசியல்வாதியையும் நம்பப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்