169
யாழ் சுழிபுரம் பகுதியில் சிறுமியை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றையதினம் சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னனிலைப்படுத்திய போது மல்லாக நீதவான் அவர்களை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த 6 வயதான மாணவி சிவநேஸ்வரன் றெஜினா கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love