இலங்கை பிரதான செய்திகள்

சுழிபுரம் சிறுமி கொலை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்


யாழ் சுழிபுரம் பகுதியில் சிறுமியை கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றையதினம் சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னனிலைப்படுத்திய போது மல்லாக நீதவான் அவர்களை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.  சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த 6 வயதான மாணவி சிவநேஸ்வரன் றெஜினா கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையிலுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.