குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வருடா வருடம் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் பூரண சந்திர கலை விழா நிகழ்வு இம்முறை மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட குஞ்சுக்குளம் றோ.க.த.ம.வி பாடசாலையில் சிறப்பாக இடம் பெற்றது. மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி மாலினி வெனிற்றா தலைமையில் இன்று புதன் கிழமை (27) காலை 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் , மத குருக்கள் , மற்றும் மடு வலய பாடசாலை அதிபர்கள் மற்றும் 52 பாடசாலையை சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த விழாவில் தமிழ் மற்றும் சிங்கள முஸ்லீம் கலாச்சாரங்களை பிரதி நிதித்துவபடுத்துகின்ற பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் மாணவர்களால் மேடை யேற்றப்பட்டது.
அத்துடன் கலைத்துறையில் சிறந்த பணி ஆற்றி தற்போது ஓய்வு நிலையில் உள்ள இசை நாடகம் நடனம் கூத்து போன்ற துறையில் பணியாற்றிய மூத்த கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி சான்றிதாழ் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.